திருக்கோவிலூர் அருகே உள்ள வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 80). இவர் மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்து வந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது மனைவியின் சேலையால் குப்புசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.