நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 63). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனமுடைந்த குருசாமி நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.