பஸ் மோதி முதியவர் பலி

வந்தவாசி அருகே பஸ் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-05-25 17:06 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆவணவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லன் (வயது 74). இவர், மாம்பட்டு கிராமம் அருகே உள்ள தனியார் நர்சரி தோட்டத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டை நோக்கிச் சென்ற அரசு பஸ் திடீரென அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்லன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்