மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதி முதியவர் காயம்

மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதி முதியவர் காயம் அடைந்தார்.

Update: 2022-05-30 19:21 GMT

கலவை

கலவையை அடுத்த தளரபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 60). இவர் நேற்று முன்தினம் கலவையில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அப்போது தேவதாஸ் என்பவர் ஓட்டிவந்த ஆட்டோ விஷ்ணு ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள்மீது மோதி விஷ்ணுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார.

இதுகுறித்து கலவை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்