உறவினரை குத்திக்கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை
உறவினரை குத்திக்கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவரது மகன் மலை அரசன், நாய் கடித்து இறந்துள்ளார். மகன் சாவிற்கு சம்மந்தி கணேசன் தான் காரணம் என கோபால் நினைத்துள்ளார். இதையடுத்து கோபால் கத்தியால் தனது சம்மந்தி கணேசனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கணேசன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி திலகம் விசாரித்து கோபாலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.