மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

பழனி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-19 17:05 GMT

பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 70). நேற்று முன்தினம் இரவு இவர், வீட்டில் இருந்த ரேடியோ சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிமுத்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காளிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்