மின்கம்பத்தில் கார் மோதி முதியவர் சாவு
கபிஸ்தலம் அருகே மின்கம்பத்தில் கார் மோதி முதியவர் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே மின்கம்பத்தில் கார் மோதி முதியவர் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
மின்கம்பத்தில் கார் மோதியது
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது65). இவரது மனைவி கோமதி(60). இவர்களது மகன் ராஜா (35). இவர்கள் 3 பேரும் கடந்த 5-ந்தேதி கணபதி அக்ரஹாரத்தில் இருந்து திருமானூருக்கு டாக்டரை பார்க்க சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.. அப்போது திருவையாறு- கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஈச்சங்குடி அருகே வந்த போது, சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
முதியவர் சாவு
இதில் காரில் இருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நமச்சிவாயம் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.