அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

Update: 2023-10-04 18:45 GMT

வேதாரண்யம், அக்.5-வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சரகம் தாதன்திருவாசல் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 70). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு துளசியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று மாலை ரெத்தினம் வேட்டைக்காரனிருப்பு புதுக்கடைத்தெரு பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் ரெத்தினம் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெத்தினம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டா் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்