ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது70). இவர் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து ஆக்கர் கடையில் விற்பனை செய்து வந்தார். ேநற்று முன்தினம் இரவு ஆரல்வாய்ெமாழி அருகே வீரமார்த்தாண்டன்புதூரில் 4 வழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் செல்லத்துரை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் செல்லத்துரை படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சப் - இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், ெசல்லத்துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.