விஷம்குடித்து முதியவர் தற்கொலை

விஷம்குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-28 19:43 GMT


திருச்சுழி அருகே உள்ள விளக்குசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவருக்கு உடல்நலம் பாதிப்பு இருந்த நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரத்தடியில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு சென்று பார்த்தபோது அவர் எலி மருந்தை குடித்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் பூமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்