விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-22 19:12 GMT

திருவரங்குளம் அருகே உள்ள கன்னியாகுறிச்சி மூங்கில் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 65). இவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்