விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விழுப்புரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலிவரதன் (வயது 62). சம்பவத்தன்று இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.