பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
திருவண்ணாமலை அருகில் உள்ள ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 64). இவர் 6-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கடந்த சில மாத காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி சைல்ட் லைன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சைல்டு லைன் அதிகாரிகள் நேரடியாக மாணவியின் வீட்டிற்கு சென்று மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போக்சோ சட்டத்தில் கைது
இதையடுத்து மாணவியை உடனடியாக மீட்டு சமூக நலத்துறை காப்பகத்திற்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.
கல்லூரி மாணவர் கைது
கீழ்பென்னாத்தூரை அடுத்த கானலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (25). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு ஒரு தலைப் பட்சமாக காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.