ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் அரங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 81). விவசாயி. இவர் மன வளர்ச்சி குன்றிய பிளஸ்-1 மாணவியான சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.