நிலத்தில் மின் வேலி அமைத்த முதியவர் கைது
விவசாயி சாவு கரணமாக அருகே நிலத்தில் மின் வேலி அமைத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி, விவசாயி. கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்் தேதி காலையில் தனது நிலத்திற்கு மாடு ஓட்டிச்சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கலவை போலீஸ் நிலைத்தில் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து பிச்சாண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தீவிர விசாரணை நடத்தியதில் பிச்சாண்டி மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது. பிச்சாண்டியின் பெரியப்பா மூர்த்தி (62) தனது நிலத்தில் பயிர்களை எலிகள் தாக்காமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளார். அதில் பிச்சாண்டி சிக்கி இறந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.