காரைக்குடி,
காரைக்குடி அருகே ஸ்ரீராம்ரெயில்வே கேட் பகுதியில் நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் வெள்ளை அரைக்கை சட்டையும், ஊதா, கருப்பு வெள்ளை, சிமெண்டு கலர் நிறத்தில் கைலியும் அணிந்திருந்தார். இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.