மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி

பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2022-08-24 16:11 GMT

பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). இவர் நேற்று பெரியகுளம் வந்துவிட்டு, பின்னர் அங்கிருந்து பொம்மிநாயக்கன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

பெரியகுளம், வைகை அணை சாலையில் அவர் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கனகராஜ் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் கணேசன் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்