விஷம் குடித்து முதியவர் தற்கொலை
போடியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
போடியில் உள்ள ராணி மங்கம்மாள் சாலை பகுதியில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் விஷம் குடித்த நிலையில் இறந்துகிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த முதியவர், போடி அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 60) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில மாதங்களாக கால் வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் கால்வலி சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவதியடைந்த முருகேசன் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.