கரூர் கோடீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேக விழா

கரூர் கோடீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேக விழா நடந்தது.

Update: 2022-06-19 18:00 GMT

கரூர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கோடீஸ்வரர் கோவிலில் ஸம்வத்ஸரா அபிஷேகம் மற்றும் ஏகாதச ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் ஸர்வதேவதா பிரார்த்தனையுடன் அனுக்ஞை மகாசங்கல்பம், விக்னேஸ்வர பூஜை புண்யாகம், கலசஸ்தாபனம், ஏகாதச ருத்ரபராயணம் மகாதீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து மூர்த்தி ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஏகாதச ருத்ரஹோமம், மகாபூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கோடீஸ்வரர் சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்