திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை
திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி திரிசூல பிடாரிஅம்மன் கோவிலில் சிறப்பு மகா யாகம் மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவையொட்டி திரிசூல பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திரிசூல பிடாரிஅம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.