நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 30 காசுகள் வீழ்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று ஒரே நாளில் 30 காசுகள் வீழ்ச்சி அடைந்து, 470 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-07-05 18:45 GMT

30 காசுகள் வீழ்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 470 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

வடமாநிலங்களில் ஸ்ராவன் பண்டிகை தொடங்க இருப்பதால் பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை கிடுகிடு என குறைந்து வருகிறது. எனவே ஐதராபாத்தில் உற்பத்தியாகும் முட்டைகள் தமிழகத்திற்கு விற்பனைக்கு வராமல் தடுக்க நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பண்ணையாளர்கள் கவலை

கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலை-யை கிலோவுக்கு ரூ.1 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கடந்த 6 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் குறைந்து உள்ளதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்