நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 3 நாட்களுக்கு 470 காசுகளாக தொடரும்

Update: 2023-07-05 18:45 GMT

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல துணை தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய அளவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அனைத்து மண்டலங்களிலும் 3 நாட்களுக்கு முட்டைவிலை மாற்றமின்றி தொடரும். அடுத்த விலை சனிக்கிழமை அனைத்து மண்டலங்களும் கலந்து சந்தை நிலவரத்திற்கேற்ப அறிவிக்கப்படும். எனவே நாமக்கல் மண்டலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 470 விலையே தொடரும்.

நாமக்கல் மண்டலத்தை பொறுத்த வரையில் வயது முதிர்ந்த கோழிகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும், கடந்த காலங்களில் பண்ணைகளில் சராசரி அளவை விட குறைந்த கோழிக்குஞ்சு விடப்பட்டதாலும் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. பண்ணைகளில் முட்டை உற்பத்தி பற்றாக்குறையாக உள்ள சூழ்நிலையிலும், சில வியாபாரிகள் அறிவிக்கப்பட்ட விலையில் முட்டை எடுப்பதை தொடர்ந்து சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்வதாக தெரிய வருகிறது.

முட்டை இருப்பே இல்லாத சூழ்நிலையிலும் பண்ணையாளரிடம் மைனஸ் கேட்கும் வியாபாரி குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல அலுவலகத்திலோ அல்லது தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்திலோ அலுவலக நேரத்தில் புகார் செய்யலாம். புகார் செய்யும் பண்ணையாளரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்