நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 4 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேபோல் கறிக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி கிலோ ரூ.122 ஆக அதிகரித்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் கூறினர்.