கொலை வழக்கில் திறம்பட பணி: பெண் போலீசுக்கு நட்சத்திர விருது -கமிஷனர் வழங்கினார்

கொலை வழக்கில் திறம்பட பணி: மடிப்பாக்கம் பெண் போலீசுக்கு நட்சத்திர விருது கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

Update: 2023-06-25 18:54 GMT

சென்னை,

சென்னை போலீஸ்துறையில் மெச்ச தகுந்த வகையில் பணியாற்றும் போலீசாரை தேர்வு செய்து மாதந்தோறும் நட்சத்திர போலீஸ் விருதை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கி வருகிறார். அதன்படி மே மாதத்தின் நட்சத்திர போலீஸ் விருதுக்கு மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தின் முதல்நிலை பெண் போலீஸ் குமாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் இந்த விருதை கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கி பாராட்டினார். 2018-ம் ஆண்டு வாணுவம்பேட்டையில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்த யமுனா என்ற பெண் மீது ராஜா என்பவர் அமிலத்தை ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடவடிக்கைகள், ஆவணங்கள், சாட்சியங்களை பெண் போலீஸ் குமாரி தொடர்ச்சியாக கண்காணித்து, நீதிமன்ற பணியில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் குற்றவாளி ராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவதில் முனைப்புடன் செயல்பட்டதற்காக பெண் போலீஸ் குமாரிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்