பள்ளி மாணவிகளுக்கு கல்வி சுற்றுலா

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி சுற்றுலாவாக ரெயில், பஸ்களில் சென்றனர்

Update: 2023-04-29 14:11 GMT

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ரெயில்வே நிலையத்தில் இன்று காலை 6.40 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து

வேலூர் வழியாக திருப்பதி சென்ற பயணிகள் ரெயிலில் 50 மாணவிகள் வேலூர் கோட்டை மற்றும் தங்ககோவிலை கண்டுகளிக்க கல்வி சுற்றுலா சென்றனர். அவர்களின் ரெயில் பயணத்தை கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ்சில் 52 மாணவிகளும், திருவண்ணாமலை, சாத்தனூர் மற்றும் செஞ்சிக்கு 3 பஸ்களில் 156 மாணவிகளும் கல்வி சுற்றுலா சென்றனர்.

அவர்களின் பயணத்தையும் கலெக்டர் தொடங்கி வைத்து வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, பெண்கள் பாதுகாப்பு அலுவலர் கோமதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பி.கந்தன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிதாஸ், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி எலிசபெத்ராணி,

ரெயில்வே நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், நிலைய கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் எஸ்.சுதா உள்பட அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்