கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கடையம் அருகே தோரணமலையில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-23 20:22 GMT

கடையம்:

கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயா் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் கயற்கன்னி வழிகாட்டுதலில் திரளான மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவ மாணவியரின் சந்தேகங்களுக்கு பேராசிரியர் கயற்கன்னி பதில் அளித்தார். தோரண மலையில் அமைந்துள்ள நூலகத்தில் உள்ள பயனுள்ள நூல்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் தேர்வில் தோல்வியடைந்தாலும், குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் யாரும் தவறான முடிவுகள் எடுக்கக் கூடாது என்று கூறினார். ஆன்மீக சேவை மட்டுமின்றி கல்வி சேவை ஆற்றி வரும் தோரணமலை மலை பக்தர் குழுவை பொதுமக்களும், பக்தர்களும் பாராட்டி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்