பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்
சுரண்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சுரண்டை:
சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் மற்றும் மேக்ஸ்வெல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். நாடார் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்.வி.ராமர், கே.டி.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவில் மேக்ஸ்வெல் அறக்கட்டளை நிறுவனர் முருகன், உறுப்பினர்கள் ஜமீர் அகமது, ஜெசிந்த் அருண், ஜெய்ஜாலன், முத்தையா சரவணன், மணிகண்டன், பிரபாகரன், கார்த்திக், ரவி, ஆவுடை முருகன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.