பெரியூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவனுக்கு கல்வி உதவித்தொகை தி.மு.க. மாவட்ட செயலாளர் வழங்கினார்
தர்மபுரி:
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பிக்கிலி ஊராட்சி பெரியூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் வேலன் (வயது19). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிளஸ்-2 முடித்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக 2-ம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல் படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டார். இந்த நிலையில் மாணவர் வேலன் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து முறையிட்டார். இதையடுத்து மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். பின்னர் அரசு கலைக்கல்லூரியில் படிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அந்த மாணவன் மாவட்ட செயலாளருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அப்போது மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, நகர அவைத்தலைவர் அழகுவேல், மாவட்ட பிரதிநிதி சுருளிராஜன், மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கவுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.