கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-29 18:45 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, பத்மநாபன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் கலந்து கொண்டன. மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள் 27 பேர் கலந்து கொண்டனர். இதில் தகுதியுடையவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்