கல்விதான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்

செய்யாறு அரசு கலை கல்லூரியில் நடந்த விழாவில் கல்விதான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று ஒ.ஜோதி எம்.எல்.ஏ பேசினார்.

Update: 2023-10-13 16:38 GMT

செய்யாறு

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தலைமை தாங்கினார்.

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒய்வுபெற்ற பேராசிரியர் ஆர்.வி. ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதியியல் துறை இணை பேராசிரியர் உமா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாணவர் பேரவையை தொடங்கி வைத்தார். வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் க.எழிலன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் ஜோதி எம்.எல்.ஏ பேசுகையில், கல்லூரி பருவத்தில் நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்விதான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

கல்லூரி காலம் தான் அவனுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்ற பக்குவப்படுத்துகின்ற பருவம். எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடாக செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கவனத்திற்கு கொண்டு சென்றதால் இங்கு மகளிர் கல்லூரி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் செய்யாறு நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் எம்.தினகரன், ஆ.ஞானவேல், ஒன்றியக்குழு தலைவர்கள் மாமண்டூர் டி.ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமார் (அனக்காவூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்