கல்வி அபிவிருத்தி சங்க மகாசபை கூட்டம்
சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி அபிவிருத்தி சங்க மகாசபை கூட்டம் நடந்தது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி அபிவிருத்தி சங்க மகாசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சிவத்தையாபுரம் ஊர் முன்னாள் தர்மகர்த்தா கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். தற்போதைய தர்மகர்த்தா பால்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் கல்வி அபிவிருத்தி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக பரமசிவன், செயலாளர் மற்றும் பொருளாளராக பால்ராஜ், உப தலைவர்களாக ஜெயபொன்ராஜ், முரளிதரன் சொர்ண பாண்டியன், உப செயலாளர்களாக ராஜன், பாலசிங், கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஆலோசகர்களாக கல்யாண சுந்தரம், பாலசுப்பிரமணியன், குணதுரை லிங்கம், தர்மலிங்கம், சுதர்சன் ராஜா, வரதராஜ் ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் கல்வி குழு தலைவர் சின்ன தங்கம், பள்ளி தலைமை ஆசிரியை பவானி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் உப தலைவர் முரளிதரன் சொர்ண பாண்டியன் நன்றி கூறினார்.