கல்வி சீர் கொண்டு சென்ற பொதுமக்கள்

இரட்டையூரணி தொடக்கப்பள்ளிக்கு கல்வி சீர் பொதுமக்கள் கொண்டு சென்றனர்.

Update: 2023-04-11 18:45 GMT

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய இரட்டையூரணி தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் கல்விச்சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொண்டு பள்ளிக்குத் தேவையான பீரோ, மேஜை, புத்தக அலமாரி மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தையும் கல்வி சீராக கொண்டு வந்தனர். பள்ளி ஆசிரியைகள் சீர் கொண்டுவந்த பெற்றோரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்