சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர்க்கு எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி...!

முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர்-ன் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Update: 2022-12-24 03:52 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர்-ன் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர்-க்கு எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்