நீரஜ் சோப்ராவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-28 11:00 GMT

சென்னை,

அங்கேரி நாட்டின் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நீரஜ் சோப்ரா மென்மேலும் பல சாதனைகள் புரிந்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்