எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்விழா:அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பிறந்தநாள் விழா
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 69-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி்சாமி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கேக் வெட்டி, அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்டம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், மாவட்ட துணை செயலாளர் முருகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பஸ்கள், வேன்கள், கார்களில் முன்னாள் அமைச்சர் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக, மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றார்கள்.
திருச்செந்தூர்
எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் தேரடி திடலில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, கானம் நகர செயலாளர் செந்தமிழ்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினம் புதிய பஸ்நிலையம் அருகே நகர அ.தி.மு.க. செயலாளர் காயல் மௌலானா தலைமையில், நகர துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை அமைப்பாளர் ஓடை கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நகர அவை தலைவர் கனகராஜ் முன்னிலையில் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் துணை செயலாளர் பெரியசாமி, முன்னாள் செயலாளர் அமிர்தராஜ், மாவட்ட பிரதி மனோகரன் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி
எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் மெயின் பஜாரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு நகர அ.தி.மு.க., செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா, யூனியன் முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை உட்பட பலர் கலந்து கொன்டனர்.