திருச்செந்தூர் முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Update: 2023-07-08 11:35 GMT

தூத்துக்குடி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் குவிந்தனர்.

தொடர்ந்து வீரபாண்டியன்பட்டனம், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் வழிநெடுக எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள சண்முகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் வழிபாடு செய்த எடப்பாடி பழனிசாமி, சூரசம்ஹாரமூர்த்தி பூஜையில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அ.தி.மு.க. நிர்வாகி சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகிய தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டி 4 அடி நீள வேல் வழங்கப்பட்டது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்