எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்

வாலாஜா நகர அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Update: 2023-05-12 18:54 GMT

வாலாஜா நகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, வாலாஜா படவேட்டம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நகர செயலாளர் டபிள்யூ.ஜி. மோகன் தலைமை தாங்கினார். வாலாஜா பஸ் நிலையம் அருகில் கேக் வெட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், கட்சி நிர்வாகிகள் டபிள்யூ.எஸ்.வேதகிரி, என்.முனிசாமி, டபிள்யூ.எஸ்.மணி, எஸ்.மூர்த்தி, எம்.வி.அம்பேத் ராஜன், ஜி.மகேந்திரன், வி.பி.நாராயணன், எம்.எஸ்.சதீஷ்குமார், டபுள்யூ.சி.முரளி, பூண்டி பிரகாஷ், ஜி.சுரேஷ், ஏ.வலிஅகமது, நந்தகுமார், பரத், ஆறுமுகம், எழிலரசன், ஹரி, மாருதி, ஜெயக்குமார், கலையரசி, கராத்தே குமார், திருப்பாற்கடல் தனஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்