மாலுமுனி கோவிலில் ஆடிமாத சிறப்பு பூஜை
மாலுமுனி கோவிலில் ஆடிமாத சிறப்பு பூஜை நடந்தது.
தோகைமலை அருகே செல்லாகவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாலுமுனி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கிடாய் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.