ஜூன் 1-ந்தேதி பள்ளி திறப்பு எதிரொலி: பள்ளி வாகனங்கள் இன்று முதல் அதிரடி ஆய்வு- விதிமுறைப்படி பராமரிக்கப்படுகிறதா?

ஜூன் 1-ந்தேதி பள்ளி திறக்கப்படுவதன் எதிரொலியாக பள்ளி வாகனங்கள் விதிமுறைப்படி பராமரிக்கப்படுகிறதா? என இன்று முதல் அதிரடியாக ஆய்வு செய்யப்படுகிறது.

Update: 2023-05-24 20:43 GMT


ஜூன் 1-ந்தேதி பள்ளி திறக்கப்படுவதன் எதிரொலியாக பள்ளி வாகனங்கள் விதிமுறைப்படி பராமரிக்கப்படுகிறதா? என இன்று முதல் அதிரடியாக ஆய்வு செய்யப்படுகிறது.

ஆய்வு

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகள் ஜூன் 1-ந்தேதி முதல் திறக்கப்படுகிறது. இதுபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொறுத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டிகள் உள்ளதா? தீயணைப்பான்கள் செயல்படுகின்றனவா?, முறையாக வாகனங்கள் பராமரிக்கப்பட்டு உள்ளனவா?, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் ஆய்வு செய்யும் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் காவல்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர்.

வாகனங்கள் சோதனை

மதுரை மாவட்டத்தில் உள்ள 276 பள்ளிகளை சேர்ந்த 1272 வாகனங்கள் சோதனை செய்யப்பட இருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று தொடங்கும் இந்த ஆய்வுப்பணிகள் 5 தினங்கள் நடைபெறும் எனவும், அரசு கூறும் அறிவுரைகளை பள்ளி நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்