பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரம்
பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லை பகுதியான போடியில் உள்ள முந்தல் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், கால்நடை மருந்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளித்தல் மற்றும் வாகனங்களில் கொண்டு வரும் கால்நடைகளை ேசாதனை செய்து அனுப்புகின்றனர்.