கீழவாடியக்காட்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்
முத்துப்பேட்டை அருகே கீழவாடியக்காட்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முத்துப்பேட்டை அருகே கீழவாடியக்காட்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே இடும்பாவனத்தில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் கீழவாடியக்காடு அருகே 2 மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த சாலை சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் தினந்தோறும் வந்து செல்லும் ஒரு பகுதியாகும்.
அதேபோல் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கும், விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் சாகுபடி பணிகளுக்கும் அன்றாடம் செல்லும் சாலையாகும்.
கிராம மக்கள் கோரிக்கை
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிகள் கவனத்திற்கு சொண்டு சென்றும் இன்னும் இந்த மின் கம்பத்தை சீரமைக்கவில்லை என மக்கள் கூறுகிறார்கள்.
இதனால் நாளுக்குநாள் மின் கம்பம் மேலும் சாய்ந்த வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடற்கரை சார்ந்த கிராமம் என்பதால் வலுவாக காற்று வீசும்போது மின் கம்பம் முறிந்து விழுந்து பெரியளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.
எனவே ஆபத்தான நிலையல் உள்ள இந்த மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.