திருவள்ளுவர் நகரில் மின்வாரிய அலுவலகம் அமைப்பது எப்போது?

மின்கட்டணம் செலுத்த 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதால் நொச்சிபாளையம் திருவள்ளூவர் நகரில் மின்வாரிய அலுவலகம் அமைப்பது என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-01-27 17:59 GMT

மின்கட்டணம் செலுத்த 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதால் நொச்சிபாளையம் திருவள்ளூவர் நகரில் மின்வாரிய அலுவலகம் அமைப்பது என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மின்வாரிய அலுவலகம்

பல்லடத்தை அடுத்த நொச்சிப்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்க வில்லை. இதனால் மின்கட்டணம் ெசலுத்த 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொல்லிகாளிபாளையம் செல்ல வேண்டியுள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதனை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் மேற்கு பகுதிகளான காளிநாதம்பாளையம். அக்கணம்பாளையம், பொன்நகர், குப்புச்சிபாளையம், அல்லாளபுரம், பாரியூர்அம்மன் நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள சுமார் 2ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்இணைப்புகளை பிரித்து திருவள்ளுவர் நகர் பகுதியில் மின் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

மின்கட்டணம் செலுத்த 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதால் நொச்சிபாளையம் திருவள்ளூவர் நகரில் மின்வாரிய அலுவலகம் அமைப்பது என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால் 5ஆண்டுகள் ஆகியும் மின் அலுவலகம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட மின் ஊழியர்கள் அனைவரும் பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்திலேயே பணிகளை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

திருவள்ளுவர் நகரில் மின் அலுவலகம் அமைக்கப்படாததால் மின் கட்டணம் செலுத்துதல், புகார் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்திற்கே செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே உடனடியாக திருவள்ளுவர் நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைத்து அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்