பட்டுக்கோட்டையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

பட்டுக்கோட்டையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2023-04-25 19:30 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை செயற்பொறியாளர் மாறன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்கள் புகார்களை தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்