விஷ மாத்திரைகளை தின்று கொத்தனார் தற்கொலை

விஷ மாத்திரைகளை தின்று கொத்தனார் தற்கொலை

Update: 2023-04-11 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள பாலப்பள்ளி, மருவூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 46) கொத்தனார். இவருக்கு தங்க கிறிஸ்டி பாய் (40) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஜஸ்டினுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்தது. இதனால் தங்க கிறிஸ்டி பாய் கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜஸ்டின் தென்னைக்கு வைக்கும் விஷ மாத்திரையை எடுத்து தின்றுவிட்டு வாந்தியெடுத்தார். இதை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகன் ஜினோ பார்த்து, அருகில் உள்ள உறவினர்களிடம் கூறினார். அவர்கள் விரைந்து வந்து ஜஸ்டினை மீட்டு அழகிய மண்டபத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இரவு ஜஸ்டின் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்