இயற்கை பேரிடரை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கை

மலைச்சரிவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இயற்கை பேரிடரை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-02-15 18:45 GMT

வால்பாறை

மலைச்சரிவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இயற்கை பேரிடரை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மலைச்சரிவில் குடியிருப்புகள்

வால்பாறை நகரில் வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி, திருவள்ளுவர் நகர், அண்ணா நகர், கலைஞர் நகர், காமராஜர் நகர், துளசிங்நகர், எம்.ஜி.ஆர். நகர், இந்திரா நகர், டோபி காலனி, கூட்டுறவு காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இங்கு 10 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மேற்கண்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளும் மலைச்சரிவில் அடுக்கடுக்கான வீடுகளை கொண்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆய்வு நடத்தி நடவடிக்ைக

இந்த நிலையில் வால்பாறை நகராட்சி, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு துறை, மின்வாரியம், காவல்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து இயற்கை பேரிடரை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எந்தெந்த இடங்களில் கூடுதல் தடுப்பு சுவர்கள், மழைநீர் வடிகால்கள் அமைப்பது மற்றும் கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக ஆபத்தான இடங்களில் இருக்கும் மின்கம்பங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்