ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-16 18:45 GMT

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் ெசய்தனர்.

ேசர்மன் அருணாசல சுவாமி கோவில்

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் தினமும் சுவாமி சப்பரத்தில் வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மதியம் சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சீவக்காய் போன்ற பலவகை அபிஷேகங்கள் நடந்தது.மாலையில் இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலமும், இரவு சாமி கற்பகப்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நடைபெற்றது.

பக்தர்கள் குவிந்து தரிசனம்

திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து கோவில் வளாகத்தில் தங்கி, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்செந்தூர், சாத்தான்குளம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய ஊர்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப் இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இன்று பச்சை சாத்தி

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசந்தி, இரவு 10:30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருனை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல்12:30 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்