மாற்றுச்சான்றிதழ் வழங்க ரூ.100 வசூல்
மாற்றுச்சான்றிதழ் வழங்க ரூ.100 வசூல்
சேவூர்
சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வை 152 பேர் எழுதியுள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால் மாணவ-மாணவிகளுக்கு நன்னடத்தைச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சான்றிதழ்களுக்கு ரூ.100 பணம் வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்ட போது " சேவூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த திங்கட்கிழமை மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்க ஏதுவாக வெளியில் உள்ள தனியார் ஜெராக்ஸ் கடைகளில் கலர் சான்றிதழ்கள் உள்ளிட்டவை எடுக்க வேண்டியதாயிற்று. இந்த செலவுகளுக்காக மட்டுமே மாணவ-மாணவிகளிடம் ரூ.100 வாங்கினோம். அதிலும் திங்கட்கிழமை 25 மாணவர்கள் மட்டுமே சான்றிதழ் வாங்க வந்திருந்தனர் என கூறினார். சமூக வளைதலங்களில் வைரலான வீடியோவால் விசாரணை மேற்கொண்ட கல்வி அதிகாரிகள், தலா ரூ.100 வாங்கிய மாணவ- மாணவிகளிடமே அப்பணத்தை திருப்பி வழங்குமாறு தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
------------------