திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

சோளிங்கர் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-07-10 16:10 GMT

சோளிங்கர் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி‌ நடைபெற்றது. இதில் கட்டைக்கூத்து கலைஞர்கள் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் நடித்து காண்பித்தனர். தொடர்ந்து மாலையில் தீ மிதி திருவிழா நடந்தது. இதற்காக அக்னி குண்டம் அமைக்கப்பட்டடது. அதன் அருகில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்