திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

லாலாப்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடந்தது.

Update: 2023-06-18 18:08 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு, கட்டைக்கூத்து, நாடகம், அர்ஜுனன் தபசு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று காலை துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்