வடகிழக்கு பருவமழையையொட்டி பரங்கிப்பேட்டையில் தயாா் நிலையில் மணல் மூட்டைகள்

வடகிழக்கு பருவமழையையொட்டி பரங்கிப்பேட்டையில் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன.

Update: 2022-10-27 18:45 GMT

பரங்கிப்பேட்டை, 

வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடரை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பரங்கிப்பேட்டையில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக தடுப்புச்சுவர் உள்ள அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை சமாளிக்கும் வகையில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால், உடனடியாக அகற்றும் வகையில் மின் வாள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள், பொக்லைன் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்